Tuesday, May 3, 2011

கருப்புபண முதலைகளின் சொர்க்கம் சுவிஸ் வங்கி!


உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாமல், உலக பணக்காரர்களையும் கவர்ந்த நாடு சுவிட்சர்லாந்து. உலக நாடுகளின் கருப்பு பண முதலைகள் பலர், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கை துவக்கி,ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர் களும் அலறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை, கூட்டுறவு வங்கி எங்கிருக்கிறது என்பதை அறியாத, நம் பாமர ஜனங்கள் கூட, சுவிஸ் வங்கிகளையும், அதில் காட்டப்பட்டிருக்கும் இந்திய பணத்தையும் அறிந்து, டீக்கடைகளில் சூடாக விவாதிக்கின்றனர்.


அரசியல்வாதிகளும்,பணமுதலைகளும் ......

சுவிஸ் வங்கிகளை நாட காரணம், "வெரி சிம்பிள்... ரகசியம் காப்போம்!' என்ற அவர்களின் தாரக மந்திரமே. சுவிஸ் வங்கிகளில் கணக்குத் துவக்க, நம்மூர் வங்கிகளில் கேட்கப்படும், பான் கார்டு, ரேஷன் கார்டு, லொட்டு, லொசுக்கு என, எவ்வித ஆதாரமும் தேவையில்லை; குண்டக்க, மண்டக்க கேள்விகளுக்கும் பதில் கூற அவசியமில்லை. பணம் இருந்தால் மட்டும் போதும்; கணக்கு, "ரெடி!' ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடு என்ற பெயர் பெற்ற நம் பாரத தேசம், சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தான். அரசியல்வாதிகளையும், கருப்பு பண முதலைகளையும் கவர்ந்த சுவிஸ் வங்கி, 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அப்போதே, வங்கி உரிமையாளர்கள், தங்களது வாடிக்கையாளர்களின் விவரத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள, ரகசிய குறியீட்டை பயன்படுத்தினர்.வாடிக்கையாளர் விவரங்களை முறையாக பதிந்து, ரகசியமாக வைத்து கொள்ள, 1713ல், "கிரேட் கவுன்சில் ஆப் ஜெனீவா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் பணத்தை பாதுகாப்பதில் சிறந்த வங்கி என்ற பெயர், சுவிஸ் வங்கிக்கு ஏற்பட்டது. சுவிஸ் வங்கிகளில் பிரதானமானது, "சுவிஸ் பாங்க் கார்ப்பரேஷன்!' 1854ல், ஆறு வங்கிகள் ஒன்றிணைந்து, "பேஸ்லர் பேங்க்வேரின்' என்ற பெயரில் இயங்கி வந்தன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பல வங்கிகள் இணைந்தன. பின்னர், 1917ம் ஆண்டு தற்போதைய பெயரான, "சுவிஸ் பாங்க் ஆப் கார்ப்பரேஷன்' என பெயர் மாற்றப்பட்டது. இது தவிர, யூனியன் பாங்க் ஆப் சுவிஸ், கிரடிட் ஸ்யூஸே, சுவிஸ் நேஷனல் பாங்க் போன்ற பல வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நாட்டில் உள்ள வங்கி செயல்பாடுகளை வரையறுக்க, "சுவிஸ் பாங்க் அசோசியேஷன்' 1995ல் ஏற்படுத்தப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் சுவிஸ் நாட்டில், 327க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காப்பதில், சுவிஸ் நாடு உறுதியாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரத்தை யாராவது வெளியிட்டால், அவருக்கு, ஆறு மாதம் சிறை, 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம் என்கிறது சுவிஸ் நாட்டு சட்டம். கடந்தாண்டு, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்திற்கு, சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் ரகசியத்தை வெளி யிட்ட முன்னாள் வங்கி ஊழியருக்கு, ஆறு மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிஸ் வங்கி அசோசியேஷன், 2004ல் கொண்டு வந்த டெபாசிட்டர் பாதுகாப்பு ஒப்பந்தப்படி, வங்கி மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்து, ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாக பெற முடியும். அதே சமயம், ஒருவர் வங்கி கணக்கு துவக்க கெடுபிடி காட்டும் ஷரத்துக்களும், சுவிஸ் நாட்டு சட்டத்தில் உண்டு. ஒருவர் வங்கியில் செலுத்தும் பணம், எந்த வழியில் வந்தது என்பதையும், சட்ட விரோதமாக வந்ததல்ல என்பதற்கான உறுதியும் அளிக்க வேண்டும். சுவிஸ் வங்கி, பணக்காரர்களுக்கோ, கிரிமினல்கள், பதுக்கல்காரர்களின் புகலிடமாக இருப்பதாக கூறுவது தவறு.5,000சுவிஸ் பிராங்க் இருந்தாலேகணக்கு துவக்கிக் கொள்ளலாம்.கணக்குதுவக்கஏஜென்டுகளைநாடவேண்டியதில்லை.நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ துவக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுக்காரர் கள் என்றால்,பாஸ்போர்ட் அவசியம் என சுவிஸ் வங்கி கூட்டமைப்பு கூறுகிறது. இருப்பினும், சுவிஸ் வங்கிகள் இவற்றை கண்டு கொள்ளாமல், டெபாசிட் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. இதனால், பலரும், கோடிக்கணக்கான ரூபாய்களை சுவிஸ் வங்கிகளில் குவித்து வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில், பணத்தை பாதுகாக்கும் சொர்க்கமாக திகழ்வது சுவிஸ் வங்கிகள் தான்.* இரண்டாம் உலகப் போர் சமயத்தில், (1939-1945) ஜெர்மன், 400 மில்லியன் டாலர் தங்கத்தை (இன்றைய மதிப்பில் நான்கு பில்லியன் டாலர்) பெர்னில் உள்ள தேசிய சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.* இங்குள்ள வங்கிகளில் பல, 200 ஆண்டு கள் பழமை வாய்ந்தவை.* மற்ற வங்கிகளைப் போலவே, சுவிஸ் வங்கிகளும், கிரடிட், டெபிட் கார்டுகளை வழங்குகிறது.*"யு.பி.எஸ்.,' வங்கி, தங்களது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு, தங்க பிஸ்கெட் டாலான சாவி வழங்குகிறது; இதன் எடை ஒரு கிலோ.* அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இங்கு உள்ளன. தனியார் வங்கி துவங்க, அவர்களிடம், 7.15 பில்லியன் டாலர் இருக்க வேண்டும்.


Thanks - Dinamalar & Dailynews.

Saturday, October 23, 2010

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய


அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?
வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

Wednesday, February 17, 2010

அறிந்து கொள்ளுங்கள் - பின் கோடு

பின்கோடு
The Postal Index Number Code System, known as the PIN Code system was introduced in India on the 15th of August, 1972. The objective of PIN Code is to simplify the sorting of mails, thus speed up their transmission and delivery.
PIN Code avoids the confusion which results out of duplication of names of various places. Correct delivery of mails is possible if the PIN Code is written, even when the address may be written in any language.
How does it work?
* Each PIN Code has six digits.
* First digit indicates the zone in which the Post Office is located.
* Second & Third digits indicate the sub-zone and sorting district.
* Fourth digit indicates the route on which the sorting office is located.
* Fifth & Sixth digits indicate the number assigned to the delivery Post Office.
Sorting District Index