Wednesday, February 17, 2010

அறிந்து கொள்ளுங்கள் - பின் கோடு

பின்கோடு
The Postal Index Number Code System, known as the PIN Code system was introduced in India on the 15th of August, 1972. The objective of PIN Code is to simplify the sorting of mails, thus speed up their transmission and delivery.
PIN Code avoids the confusion which results out of duplication of names of various places. Correct delivery of mails is possible if the PIN Code is written, even when the address may be written in any language.
How does it work?
* Each PIN Code has six digits.
* First digit indicates the zone in which the Post Office is located.
* Second & Third digits indicate the sub-zone and sorting district.
* Fourth digit indicates the route on which the sorting office is located.
* Fifth & Sixth digits indicate the number assigned to the delivery Post Office.












Sorting District Index

தொடர்ந்து உள்ளே பாருங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் - நித்யானந்தர்

தொடர்ந்து உள்ளே பாருங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடலாம்
- நித்யானந்தர்


ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய இழப்பு என்னவென்றால், தனக்குள் ஒரு ஐந்து நிமிடம், அமைதியாக உட்கார முடியாமல் இருப்பதுதான். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் உங்களோடு உட்காருவது என்கின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.


ஏதாவது ஓய்வு வந்ததென்றால், உடனே வீட்டில் போய் படுக்கையில் சாய்கிறீர்கள்.

படுக்கையில் விழுந்த உடனே, முதலில் செய்கின்ற வேலை என்னவென்றால், ரிமோட்டைத் தட்டுவது. அந்த ரிமோட்டைத் தேடி எடுத்துக்கொண்டுதான் படுக்கையிலேயே உட்காருகின்றோம்.

ஒரு வேளை கரண்ட் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லையென்றால் என்ன செய்வோம்...? பழைய செய்தித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் அதையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம். எடிட்டர் கூட அப்படிப் படித்து இருக்க மாட்டார்கள். அப்படி படிப்போம். கோர்த்துப் படிப்போம்.

கோர்த்துப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்த எண்ணம் வந்தாலும், கடந்த கால அனுபவத்தோடு கோர்த்துப் பார்க்காமல் அப்படியே தளர்வாகப் பாருங்கள்.

"போரடிக்குதா?
சரி அடிக்கட்டும்.
வேறு என்ன செய்ய முடியும்?"

"இப்போது இப்படித்தான் இருக்கும்" என்று எந்த எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள். என்ன நடந்தாலும் சரி. நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே வலி இருந்தாலும், ஒரு வித மந்தத்தன்மை இருந்தாலும், வேறு ஏதாவது துக்கம் இருந்தாலும், என்ன இருந்தாலும் சரி, உங்களுடைய உடல் ரீதியான, மன ரீதியானப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சரி.

உதாரணத்திற்கு...

முட்டி வலி என்றால், இப்போது "வலி இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது?" என்று ஆழ்ந்து பாருங்கள். நேற்று இருந்த முட்டி வலி வேறு, நேற்று முன்தினம் இருந்த முட்டி வலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டி வலி வேறு. இதெல்லாம் தனித்தனியான அனுபவங்கள். அதைக் கோர்த்துப் பார்த்து இப்பொழுது இருக்கின்ற 'முட்டி வலிதான்' அது என்று நினைக்காதீர்கள்.

இப்போது முட்டியில் என்ன நடக்கின்றது? என்று பாருங்கள்.

ஒரு சின்னக் குழந்தைக்கு ஒரு ரோஜப்பூ கிடைத்தால் எப்படிப் பார்க்கும், புதிதாக மலர்ந்து பார்க்கும். அதுபோல் புதுமையோடு பாருங்கள். வலி இருக்கின்ற இடத்தைப் பாருங்கள். உடல் வலியாக இருந்தாலும், மன வலியாக இருந்தாலும், புதிதாகப் பாருங்கள்.

அந்த எண்ணத்தைக் கோர்த்துப் பார்க்காமல் "என்ன நடக்கின்றது?" என்று உற்றுப் பாருங்கள்.

ஒரு சின்ன நுட்பம். இது ஒரு அருமையான நுட்பம்.

இப்போதே, ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். மனதிற்குள்ளே எந்த எண்ணம் வந்தாலும், வலியோ, வேதனையோ, துக்கமோ, சந்தோஷமோ, சாந்தமோ என்ன வந்தாலும், "என்னதான் நடக்கின்றது?" என்று அமைதியாகப் பாருங்கள்.

கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்!

எவ்வளவு நேரம் முடிகின்றதோ, அவ்வளவு நேரம் முயன்று பாருங்கள்...

இந்த சிறிய செயலைத் தொடர்ந்து செய்தினாலேயே, அந்த அசுர மனதை எளிதில் மாய்த்துவிடலாம். ஜீவன் முக்தியைத் தொட்டு விடலாம். எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் வாழ்வதுதான் ஜீவன் முக்த நிலை.

Tuesday, February 16, 2010

கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்

கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது.

கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம்.

இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.


கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.


வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.

டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.

இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.

கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

ஸ்ரீலங்கா




























































































Fun Zone,










































































































































Tuesday, February 9, 2010

பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்

பழைய கணினிகளைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு புதிதாக மாறுபவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கணினியையே இன்னும் பயன்படுத்தும் மக்களும், நண்பர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தப் பதிவு.
இன்றைய நவீனக் கணினி உலகில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை யெல்லாம் அந்தப் பழைய கணினிகளில் பயன்படுத்த இயலாது. வேக ஓட்டம் சீராக இருக்காது. சுத்தமாக அந்தப் பழைய கணினியானது செததுச் செத்து விழும். இருப்பினும் அவர்களுடைய கணினியின் குறைந்தபட்சத் திறனை வைத்துக்கொண்டே அதிகபட்சச் செயல்பாட்டை அனுபவிக்கக் கீழ்க்கண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

1) குறைந்த கணினித்திறனையும், நினைவகத்தையும் உபயோகித்து PDF கோப்புகளைப் படிக்க Sumatra PDF பயன்படுத்தலாம். ( Adobe Reader ஐ பழைய கணினியில் நிறுவிப் பாருங்கள். கண்டிப்பாக நிறுவுவதற்கே நிறைய நேரம் பிடிக்கும். பின்பு PDF கோப்பைத் திறந்து பார்ப்பதற்கு இன்னும் அதிக நேரம் பிடிக்கும். )

2) MS Word க்கு மாற்றாக AbiWord பயன்படுத்தலாம். இலவசமாகக் கிடைக்கும் ஒரு Word prorcessing பயன்பாடு இது. 16 MB நினைவகம் கூட இந்தப் பயன்பாட்டின் செயல்பாட்டிற்கு மிக நல்ல வேகத்தை அளிக்கும்.

3) Photo Editing ன் அடிப்படைத் தேவைகளைச் செய்வதற்கு IrFanView பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் நீள,அகலத்தை மாற்றுவதற்கு இதைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம்.

4) குறைந்த நினைவகம், கணினித் திறனைப் பயன்படுத்தக் கூடிய நிரல் எழுதும் பயன்பாட்டிற்கு NoteTab Light பயன்படுத்தலாம்.

5) நவீன மின்னஞ்சல் யுகத்தில் பயன்படுத்தும் Ajax போன்றவற்றைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் பயன்பாடுகளை Popcorn பயன்படுத்தி ஓரங்கட்டலாம்.

6) 32 MB நினைவகமும், 486 processor, Windows 95ம் கொண்ட பழைய கணினியில் இணைய உலவுதலுக்காக K-Meleon பயன்படுத்தலாம். உலகின் மிக வேகமான browser எனப் பெயரெடுத்தது இது.

7) Pentium முதலாம் தலைமுறைக் கணினிகளில் ஒளிப்படங்களைக் காணொளிகளைக் காண்பதற்கு VLC Media Player பயன்படுத்தலாம். DVDs, MP3 போன்றவற்றை இயக்குவதற்கு இது ஒரு அருமையான மென்பொருள்.

8)கணினியின் தேவையற்ற குப்பைக் கோப்புகளை அழித்து நிறையக் காலியிடங்களை hard disk (வன்வட்டு)ல் உருவாக்க CCleaner பயன்படுத்தலாம்.

9)Google, yahoo, MSN என ஒவ்வொரு அரட்டை அரங்கங்களுக்கும் தனித்தனியாக IM - Instant Messaging பயன்பாடுகளை நிறுவுவதற்குப் பதிலாக Pidgin என்னும் ஒரேயொரு பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.10) பழைய கணினியில் USB - Universal Serial Bus இணைப்பதற்கான வழிவகை இல்லாவிடில் அதற்கான ஒரு Card வாங்கிச் செருகி USB ஐக் கையாளலாம்.2010ல் USB 3.0 வருகிறதாம்.

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது...?

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது...?

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சின்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்?
அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.
இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது?
மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later.
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ät-märk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள்.
இப்படியாகப் பலவிதம்."However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common. Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail - oddly enough for the anti-snail-mail set - portrays the @ sign not only in French ("petit escargot") and Italian ("chiocciola"), but also in Korean and Esperanto ("heliko"). Danes and Swedes call it "snabel-a" - the "a" with an elephant's trunk; Hungarians a worm; Norwegians a pig's tail; Chinese a little mouse; and Russians a டாக்"உணவு வகைகளும் இதற்கு உருவகம் தந்துள்ளன."Food offers other tantalizing metaphors. Swedes have borrowed the cinnamon bun ("kanelbulle"). Czechs have been inspired by the rolled pickled herring ("zavinac") commonly eaten in Prague's pubs. Spaniards sometimes call it "ensaimada," which is a sort of sweet, spiral-shaped bagel typically made in Majorca. Hebrew speakers use "shtrudl" (or "strudel"), as in the well-known roll-shaped pastry. My favorite, though, is the Finnish "miukumauku" - the "sign of the meow"- inspired by a curled-up, sleeping cat."

இலவச மென்பொருள்கள்

இலவச மென்பொருள்கள்

ஒரே பொட்டலமாக (zipped file) 90 MB அளவுக்குள், 50 விதமான இலவச மென்பொருட்கள் உங்களுக்காக.

இதற்கு Computer Repair Utility Kit எனப் பெயரிட்டுள்ளனர்.
Ipod, Flash Drive, USB கருவிகளில் இந்த Pack ஐ எடுத்துச் சென்று கணினிகளில் வன்பொருளில் (hardware) ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யலாம்.
Hardware Engineerகளின் அத்தியாவசியப் பயன்பாடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.
மேலும் பொதுப்பயனர்களின் கையடக்கக் கருவிகளிலும் (hand held devices) அவசியம் இருக்கவேண்டிய தொகுப்பு இது.
கோப்பு மேலாண்மை (File Management)
தகவல் அறிதல் (Information)
கெட்டதைச் சரிசெய்ய (Repair Tools)
இழந்த தகவலை மீட்க (Recovery Tools)
வைரசு நீக்குவதற்கான கருவிகள் (Virus and malware Removal)
வலைப்பின்னல் கருவிகள் (Network Tools)
இதர வகை (Miscellaneous)
புத்தாக்கம் (Tweaks)
Scripts

எனப் பலதரப்பட்ட தலைப்புகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு.
தரவிறக்கம் (Download) செய்யக் கீழேயுள்ள முகவரியில் சொடுக்கவும்.
http://www.technibble.com/computer-repair-utility-kit/

Gmail Hacks, Tips & Tricks

Gmail Hacks, Tips & Tricks
Note: All tips current as of Firefox 2.0.0.12 and Gmail 2.0 beta.


You already know that Gmail beats all other email providers with its endless customization capabilities, Google product integration and fantastic spam filter. Take it to the next level with these Gmail power user tips and Greasemonkey extensions for Firefox. We haven’t forgotten the Mac users, either. For more great resources, check out the official Gmail blog and the Gmail Power Users group on Google Groups. If you'd like to learn more about other email programs, check out the email category at the web directory.

1. Master the Gmail keyboard shortcuts
If you haven’t already, master the shortcut keys. Compose, mark as read, archive and much more with the press of a button. Sure, you know c for compose and ! for report spam, but do you know g + t for the sent mail folder? You can find a complete list at the official Gmail shortcut page.


















2. Google Code Macros
The Greasemonkey extension for Firefox, familiar to many power users, allows JavaScript functionality on any web page. Piggybacking off of this capability, the generically-named Macros script enables a number of keyboard shortcuts. Google apparently integrated some of Macros shortcuts when revamping Gmail, but there are still functions that the Macros programmers believe Gmail needs. “I firmly believe this is *the* essential Gmail trick to end all Gmail tricks,” writes David Chartier at DownloadSquad.

3. Create bookmarklets for frequent searches
This form created by Steve Rubel generates a bookmarklet for searches in Gmail. (By the way, a bookmarklet is a baby bookmark that acts a single click tool for a webpage or browser—thanks, Wikipedia). Take Rubel’s form further by dragging the bookmarklets to your bookmarks bar.

4. Resize your compose box
The aptly-named Resizeable Textarea Firefox extension allows you to click and drag the edge of your compose box without resizing your browser window. Note that any browser built with the newest Opensource.org webkit—Safari, for example—will already have this capability. For more browser info, check out the internet software category.
















5. View unread messages first
Search on the string “label:unread label:inbox” to force all of your unread messages to the top of the list, writes Matt Cutts. (Note: you don’t have to create any labels for this to work.) Try bookmarking Cutts’s search and dragging it to your bookmarks bar to view all unread messages first.

6. Streamline adding attachments
Wouldn’t it be great if you could drop attachments directly into the attachment box? Check out the Firefox extension Dragdropupload if you are running Firefox 2.0 (as of this writing, it hadn’t been updated for 2.0.0.12).






7. Quickly switch between Google accounts
If you have multiple Google accounts—a Gmail with Google Apps account and a regular Gmail account, for example—streamline them with this script for Firefox with Greasemonkey. The script adds a “change user” drop-down bar in place of the “sign out” link.








You can also try Gmail Manager (also a Firefox extension), which adds a Gmail menu bar to the Firefox window. Juggle multiple accounts, sign in and out.















8. Bookmark a single email
As of November 2007, all Gmail messages have dedicated URLs (according to the official Gmail blog). Rather than killing a tree by printing the message or laboriously copying down the info, you can CTRL-D (or ?-D) an important email and refer to it at your leisure.

9. Automate frequently repeated text
Signature functionality is built into Gmail, but frequently typed phrases can be automated with Firefox extension Signature, which allows you to insert designated text with a keystroke. (As of this writing, Signature is not yet compliant with Firefox 2.0.0.12.) Also try a Windows app called AutoHotKey or Mac app TypeIt4Me. Both apps allow you to create keystrokes to automate text in virtually any application.















10. POP3 & IMAP forwarding
“I recommend using IMAP (where the mail is both on the server and on your local machine(s)/device(s)) and uploading all your email onto Gmail,” writes Mark Wheeler, a Gmail power user. “You can keep copies on the Google servers and your desktop/laptop/phone so that they are all efficiently accessible and available anytime anywhere. Don't have to worry about backups, or disk space...I have 25,000 emails and have only used 9% of my space!”

To upload old email like my friend did, set up a Gmail IMAP account in your desktop email client. In the client, establish folders that correspond to your Gmail labels, and drag and drop your non-Gmail into the folders. If you're using Outlook with .PST format or Outlook Express, you will have to convert or export the emails to mBox data file format before the messages will translate. The process may take some time, and your client may hang. Also, the original dates and times attached to the messages will appear in Gmail as the dates and times that the messages were imported into Gmail. But it's worth the trouble to utilize your tricked-out Gmail, right? Click here for a tutorial from My Digital Life.

11. Mute a conversation
Ever found yourself subscribed to a mailing list and the current conversation has nothing to do with you? If you don’t want to unsubscribe, you can easily stop the friendly spam with the Gmail mute function. Select a message in the thread and hit the m key to auto-archive all incoming messages in the conversation. The thread will stay muted until you unmute it; it will also un-mute itself if your address appears in the To or CC box.

12. Get it all in one place
Gmail’s built-in Mail Fetcher allows you to receive and send from up to five different accounts via POP3. Unlike a simple forwarding feature, Mail Fetcher allows synchronizing of your Gmail actions with the home server. Go to your Gmail Settings ? Accounts, then Add another mail account. One caveat of sending from non-Gmail accounts: the recipients may see FROM you@Gmail.com on behalf of you@otherdomain.com, especially if the recipients are using a client like Outlook.










13. Get it all in one place
With the Google Toolbar and Gmail combined, power user Steve Rubel has made his Gmail account into a massive archive of his interests. Steal his trick by adding the Google toolbar to your browser. When you happen across text or images you want to save, highlight them and click the send to Gmail link. Rubel has also tons of other great hints.


14. Secure your email

Work that requires maximum security—or run-of-the-mill paranoia—is made easier with this script with Greasemonkey + Firefox. It'll force a secure connection when accessing Gmail. To make sure you're as secure as you can be, check out the internet security category at the web directory.


15. Don't forget that attachment

If your sent folder is full of "Oops, here's the attachment" messages, this handy reminder Greasemonkey script will scan your messages--including replies and forwards--for references to attachments. (The release notes say that it searches for "attached," "attachment" or certain unknown variations.) If you mention an attachment and forget to add it, a prompt will pop up.


16. Gmail Notifier for Windows / Google Notifier for Mac

Rather than keeping a browser window open and hitting CTRL-R like you've got OCD, install a widget like Gmail Notifier for Windows or Google Notifier for Macs. It'll check your email (and Google Calendar, if you're a Mac user) as compulsively as you do. And as with almost everything else under the sun, there's a Firefox extension that will serve the same function (it's not released by Google).






17. Google Desktop Plug-In for Google Notifier

Some users have reported compatibility issues between Google Toolbar, Google Apps and Google Desktop. Everyone's configuration is different, blah blah blah, so it's impossible to know, but Maxim Alexeyev created this Google Desktop Plug-In which purports to replace Google Notifier for Google Desktop and Google Toolbar users. The plug-in also offers multi-username functions and Google Apps support.


18. Check Gmail from the couch with Apple Remote

Mac users who actually use their Apple Remotes (show of hands—anyone? anyone?) can check out this Lifehacker tutorial that lets you check your Gmail from your couch with Firefox shortcuts. There’s gotta be someone out there who needs this…




19. Read your Google Reader RSS feeds in Gmail

Treat your Google Reader RSS feeds the same way you treat old friends with this Greasemonkey + Firefox script. Feeds invading your Gmail will offer more-efficient time-wasting than ever before. Note that Google Reader and Gmail seem to be moving closer together in functionality and interface and it's likely that they'll soon be officially integrated.




20. Include or exclude Chat from search results

Chat conversations are automatically filed like emails with a Chat label, so to exclude Chat when searching, use the string -label:Chat. Conversely, to search only Chat conversations, use the string +label:Chat. The –label: and +label: syntax will work to exclude or include any label in Gmail search results. Another Jim Barr tip.


21. Use Gmail like an external hard drive

Use up any vegetating space in your Gmail account with this Windows drive shell extension. Your Gmail space appears in My Computer/Windows Explorer as an external drive, and when you drag and drop a file to the drive, it sends an email to your Gmail account with the file as an attachment. Note that this is a fairly old program but seems to have been updated for the latest Gmail version. Mac users can try gDisk and Linux users can check out GmailFS.




22. Spam counter hider

You’re browsing through your (overstuffed) inbox. You have many labels, filters and tricks that ensure that your email gets to you efficiently. Even so, you look at the number of messages in the spam folder and a small voice inside you says, “There could be something in the spam folder that doesn’t belong there!” Forget it. There never is. This Greasemonkey + Firefox script hides the spam count number, so the thought doesn’t even cross your mind.


23. Hack Gmail’s CSS

“Stylish is to CSS what Greasemonkey is to JavaScript,” says the Firefox extension page for Stylish. Cascade those style sheets yourself, or grab them from userstyles.org. For more web design tips and tricks, check out these web design and development resources.


24. Launch one-key composing with Launchy (Windows) or Quicksilver (Mac)

Launchy is a free, open source keyword launcher that runs in your system tray and opens apps with designated keystrokes. Launchy’s still “a far cry from Quicksilver for Mac” according to Gina Trapani at Lifehacker, but Adam Pash of Lifehacker says,
“I can't recommend it highly enough.” There’s a quick tutorial on one-key Gmail composing with Launchy—opening a browser logged into Gmail with a compose window with a single keystroke—here.




25. Better Gmail 2 with all-in-one Greasemonkey script

For a one-size-fits-all solution that combines several Greasemonkey scripts into one package, check out Better Gmail 2, which combines dozens of Greasemonkey scripts into one package. Allow HTML use in signatures, force a secure connection, convert labels into folders and make the spam folder invisible. There’s also a Better Gmail 2 extension for those using Firefox 3 beta. Cnet strongly recommends the extension in their review.


26. Create a podcast of your Gmail

Without an iPhone or Blackberry, the morning subway ride can get pretty boring. And you can’t navigate a smartphone while driving—or at least, you shouldn’t. Create an RSS feed from your Gmail account with this syntax:
https://username:password@gmail.google.com/gmail/feed/atom
Then sign for a FeedBurner account to host and distribute it. Use a RSS to podcast site like AudioDizer.com or one of the many options at NextUp to create text-to-speech files. Voila! This hack is based on a tip from Mike Donaghy. For even more, check out these podcast resources.


27. Force mailto: to open with Gmail

The annoyance of prompts from Outlook or Apple Mail with every mailto: link you click can be ended. This Greasemonkey script forces mailto: scripts to open Gmail. (Note: it’s unclear whether this script is compliant with the newest version of Gmail.)


28. Emulate a mail client

For those who can’t decide between a full-fledged mail client and browser-based Gmail, SimpleMail straddles the divide with a three-paned mail view. Mac users should note Adam Pash at Lifehacker warns that he had trouble getting IMAP to work with Firefox 3 on the Mac, but he doesn’t mention testing it with Firefox 2.0.0.12.




29. Sort mail with the Trusted Trio

Gina Trapani at Lifehacker suggests sorting your Gmail according to the Trusted Trio system—Follow Up, Hold and Archive. To keep the Inbox clear, sort all messages into one of these three categories. Since Gmail has an archive function built-in, Trapani suggests merely creating two labels—Follow Up and Hold; if desired, add numbers to get the two folders to display in the order you’d like. Check out the full explanation of the Trusted Trio system.


30. Pre-label and sort your mail

Many email providers, including Gmail, allow you to append your address with +something—for example, you can give all of your OS/2 user group buddies your address as you+OS2@gmail.com. (Note that Gmail addresses are not case sensitive). The incoming emails that wax nostalgic about IBM’s late great OS will be pre-labeled, and you can establish filters to sort them. The +something system also allows you to stop spam before it starts. If inappropriate emails with a designated +something address, you can kill off the address. You’ll also have an inkling how the spam got started. Thanks to Jim Barr for this tip.


31. Force Firefox extensions to work with Firefox 3 beta

This Lifehacker tip is for extreme power users only, as it could open your system to serious security flaws and bleeding edge malfunctions. It’s only a few easy steps after the jump. Have fun! User fluxam reports a list of extensions that were functioning in 3 beta as of 02/13/2008.


32. Add address-specific signatures with HTML

If you use multiple Gmail accounts, the Gmail HTML Signatures extension for Firefox + Greasemonkey automates the signature process. Based on the address you’re sending from, this extension will automatically insert HTML-formatted signatures.




33. Backup your Gmail

If you’re using a desktop or smartphone mail client, you’ve already got some backups of your email. But what if you’re all web-based? What if Gmail servers were hit by a nuclear bomb? Stop the paranoia and check the Gmail backup tutorial here and the Google Apps backup tips here.


34. Command line Gmail access (Windows) and nightly backup

There’s a tutorial—not for n00bs—here.


35. Force Gmail Notifier (Windows) to use SSL

This wikihow tutorial involves hex editing. Advanced Mac users with Google Notifier, here’s a comment on the O’Reilly Mac DevCenter forums that should help. Edit at your own risk

Tuesday, February 2, 2010

வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?

Author: ஜி.எஸ். ரமேஷ்

பல சுயதொழில் புரிபவர்கள் தங்களது நிறுவன வெற்றிகளைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்க மட்டுமே சாத்தியமா? அதை அடைய முடியாதா?
முடியும்! அதற்குத் தேவை மாற்றம்.
மாற்றம் கொண்டுவரத் தயாராக இருப் பவர்கள் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர். மாற்றத்திற்கு தயாராகாதவர்கள் தோற்றுக் கொண்டு இருக்கின்றனர்.
Mascot, Mphasis, Sasken Communication Tech, ஆகிய மூன்று கம்ப்யூட்டர் துறை நிறுவனங்கள் தங்களது வெற்றிகளை நிலைப்படுத்திக் கொண் டுள்ளன. அதுவும், இத்துறை மிக மோசமாக இருந்த 2001-ம் ஆண்டில்!
தொழில் சூழ்நிலைகளைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பதை விட அதற்குத் தேவையான வகையில் நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் (Better to light a candle than curse darkness). இதற்கு சில மனோதத்துவக் கோட்பாடுகளை (Psychological) புரிந்து கொள்ள வேண்டும்.
1. பிரச்சினைகளைத் தீர்க்க, நீங்கள் வழக்கமாக கையாளும் முறை விஞ்ஞானப் பூர்வமானதாக இருக்க வேண்டும் (Scientific Approach).
2. மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு (Pre Conceived Idea) அதன் மூலமாகவே சூழ்நிலைகளை ஆராயக்கூடாது. திறந்த மனதுடன் சூழ்நிலைகளை ஆராய்ந்து எது நிஜமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கையாள வேண்டும்.
3. மிக மிக குறைவாக அனுமானம்
(Assumption) செய்ய வேண்டும். விளம்பரம், செய்தி ஆகியவற்றைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்து அனைத்தும் புரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவரை அணுகி ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்குக் கூட EGO பார்க்கி றோம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய மனப்போக்கு ஒரு மாற்றம் கொண்டு வர தடையாக செயல்படும். நமது EGO விற்கு எடுத்துக்காட்டு – “நேரம் இல்லை”, “எனக்குத் தெரியும்” போன்ற எண்ணங்கள்.
4. தொழில் மோசமான நிலையில் இருக்கும் பொழுது, ஆலோசனை (Consultation) பெற முனைப்பு காட்ட வேண்டும்.
ஒரு நிறுவன வளர்ச்சிக்கு மைய அச்சாக
(Central axis) இருப்பது விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறை – பொருளாதாரம் (Economics) மனோதத்துவம் (Psychology) இவையும் விஞ்ஞானம் என உணர வேண்டும்.
தொழில் சூழ்நிலை சரியில்லாமைக்கு ஆலோசகர் (Consultant) என்ன செய்து விட முடியும்? என தவறான அனுமானித்தல் கூடாது. அதே போல், தொழில் சரியில்லாத வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கும் போது, ஆலோசகர்களை அணுக தயக்கம் காட்டுவது ஆபத்தானது.
5. தொழில் நலிவுறுவதற்கு சுய தொழில் புரிபவர்தான் முதல் காரணம் என்பதை உணர வேண்டும். If the ship sinks, the captain is responsible.
6. பிறர் கொண்டுள்ள பொதுவான கருத்து களைத் தானும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக, தொழில் சூழ்நிலை சரியில்லை என்பது பொதுவான கருத்து. அதனாலேயே தமது நிறுவனமும் அதிக லாபம் பெற முடியவில்லை என நினைப்பது தவறு. அறிவுப்பூர்வமான சுய ஆய்வுக்கு (Logical self analysis) இத்தகைய மனப்பான்மை தடையாக இருக்கும்.
இத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தால், முதலில் சொன்ன மூன்று நிறுவனங்களும், மோசமான தொழில் சூழ்நிலையிலும், சாதித்திருக்க முடியுமா?
7. தொழில் சூழ்நிலை முன்பு இருந்தது போல் சாதகமாக இல்லை என்று பலர் நினைக்கின்றனர். சூழ்நிலை என்பது மாற்றத்திற்குரியது என்பது அடிப்படை அறிவு (Common sense ). இதில் சாதகமாக உள்ளது என்றோ அல்லது சாதகமாக இல்லை என்றோ நினைப்பது தவறு.
உண்மையில்,
இத்தனை காலம் கையாண்ட அணுகு முறை என்பது தற்போது மாறியுள்ள தொழில் சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்ற அளவில்தான் பார்க்க வேண்டும். புதிய சூழ்நிலைக்கான புதிய யுக்திகளை, புதிய எண்ணங்களை கைக்கொண்டால், எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றி பெறுகிறோம் என்ற எண்ணம் ஏற்படும்.
8. சூழ்நிலை சரியில்லை என்ற எண்ணம் பிறர் வழி போவோரிடம் (Followers) இருக்கலாம். பிறரை தன் வழிக்கு கொண்டு வருவோரிடம் (Leaders) இருக்கலாமா? ஒரு சுய தொழில் புரிபவர் பிறர் வழி போகும் மனப்போக்கு உடையவராக இருக்க முடியுமா?
9. சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் அணுகு முறைகளை விஞ்ஞான ரீதியில் கலந்தா லோசித்து (Scientific Consultation) மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டும். அதன் வெற்றி, பிறரை உங்களது வழிக்கு கொண்டு வர உதவும்.
10. சுய தொழிலில் இத்தகைய தலைமைப் பண்பு முக்கியம். Business Leader ஆக முயற்சிக்க வேண்டுமே தவிர Business Followers ஆக முயற்சிக்கக் கூடாது.
11. பிறர் போகாத, கால் பதிக்காத இடத்திலேயும் நீங்கள் கால் பதித்து, பாதையாக்கிக்கொள்ள வேண்டும். பிறர் கையாளாத அணுகு முறையைக் கூட நீங்கள் கையாளத் தயாராக இருக்க வேண்டும். பிறரின் ஏளனத்தையும் பொருட்படுத்தாமல், நவீன அணுகுமுறை களைக் கையாளும் துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
12. இறுதியாக, ஆனால் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். When you hire a dog, allow it to bark என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசகர் என்ன சொல்ல வேண்டும் (Consultant) என்ற உங்களது விருப்பத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதே போல் உங்கள் ஆலோசகர் என்ன ஆலோசனை கூறுகிறாறோ, அதை அப்படியே செயல்படுத்துங்கள். நீங்கள் அதை மாற்றாதீர்கள்.
அவருடைய ஆலோசனையை செயல்படுத்திய பிறகும், நல்ல பலன் கிடைக்கவில்லையெனில், அவரையே கலந்தாலோசித்து வேறொரு ஐடியா கூறச் சொல்லுங்கள். அப்பொழுது தான், செயல்பாடுகளையும், பலாபலன்களை யும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
13. சுய ஆய்விற்கு
உங்களது செயல்பிரச்சனைகளைச் சமாளிக்க……
1. தொழில், சூழ்நிலை சரியில்லை என்று நடப்பது நடக்கட்டும் என இருந்து விடுவீர்கள்
2. பணம் இருந்தால், தொழில் சரிவை சரிசெய்து விடலாம் என்று நினைத்து செயல்படுகிறீர்கள்.
3. ஆலோசகர்களை அணுக தயங்குகிறீர்கள்
4. யாருடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் இல்லாமலேயே தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நினைக்கிறீர்கள்
அத்தயை செயலுக்கு காரணமான உங்கள்மன இயல்பு
ஆக்கப்பூர்வமான (Creative thinking) எண்ணம் குறைவாக உள்ளது. உற்சாகம் குறைந்தும், மனச்சோர்வு (Depression) அதிகமாகவும் உள்ள மனநிலை.
பணமில்லாமல் போனதற்குக் காரணம், உங்களது கடந்தகால செயல்பாடுகள்லி சுபாவங்கள் என்று உணரத் தவறிவிட்டீர்கள். மீண்டும் பணத்தை மாத்திரம் முதலீடு செய்தால் கடந்த கால முதலீடு கரைந்தது போல் இதுவும் கரைந்து விடும்.
அதை உணர்ந்து செயல்பட்டால், ஆக்க பூர்வமாய் சிந்தித்து உற்சாகமாய் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
உங்கள் மனதினுள் உங்களைப் பற்றிய சுய ஆய்வு செய்து கொள்ள தயக்கமும் தோல்விக்கு தானே காரணம் என தெரிய வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சியும், உங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சுய கௌரவம் (EGO) உங்களுக்குத் தோல்வியை ஏற்படுத்தும் விதமான மனதை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
14. மேலும் ஒருவரிடம் ஆலோசனை பெற. அவருடைய தகுதியைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர் பிரபலமா என்று பார்க்க வேண்டிய தில்லை. பிரபலத்திற்கும் ரிசல்ட்டிற் கும் சம்பந்தமில்லை – உதாரணத் திற்கு பிரபலமாகாத எத்தனையோ மருத்துவர்கள் நல்ல ரிசல்ட்டை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
அது மட்டுமல்ல, ஒரு பிரபலத்தின் ஆலோசனைக் கட்டணத்தை தர எத்தனை பேருக்கு மனம் வரும்? எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், எல்லோருமே மும்பை மருத்துவமனையில் செலவு செய்து சிகிச்சை பெற முன்வருவார்களா?
எனவே, பிரபலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஒரு நல்ல ஆலோசகரின் திறமைக்கும், அவர் உங்களுக்கு ஏற்படுத்தித் தரவல்ல ரிசல்ட்டிற்கும் முக்கியத்துவம் தரும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

Author: 'நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு.
‘நாநலம் என்னும் நலனுடைமை’ என்பார் திருவள்ளுவர். நாவன்மையை நானிலம் போற்றும். நலனுடைமை என்று கூறுவதன் பொருள், நாநலம் ஒரு நல்ல உடைமை. அதாவது, நல்ல சொத்து. ஆகவே, கவனமாகக் காப்பாற்ற வேண்டும்.
ஒரு பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தோம். அந்த மன்றத்தின் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பட்டிமன்றப் பொருள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் யாவரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். இடையிடையே ‘இதையெல்லாம் நான் பேசக்கூடாது’ என்று வேறு சொல்லிக் கொண்டே பேசுகிறார். இதைப்பற்றியெல்லாம் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேசவேண்டும் என்று கட்டளை வேறு போடுகிறார். சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்று தொகுப்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போதுதான் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும்.
வரவேற்புரை சொல்லு பவர் வந்தவர்களை வரவேற்பதோடு
நிறுத்திக் கொள்ளுவதுதான் முறையாகும். அதற்குமேல் பேசி னால், அது அதிகப்பிரசங்கித் தனமே தவிர வேறல்ல.
நன்றியுரை ஆற்ற வந்தவர், நன்றி சொல்லி முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி, சொற்பொழிவாற்றிய வர்களின் பேச்சை திறனாய்வு செய்தும், பேசியவர் மனம் நோகவும் பேசுவது முறையா காது. நன்றியுரை என்பது, பேசிய வரை மனங்குளிரச் செய்வதாக அமைய வேண்டும்.
துணைப் பேச்சாளர் சுருக்க மாகப் பேசுவதே நல்லது. முக்கிய மான பேச்சாளரின் நேரத்தையும் துணைப் பேச்சாளர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டால், முக்கியப் பேச்சாளர் யார் நேரத்தை எடுப்பது?
குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு பெறாத கூட்டம், கேட்க வந்தவர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கும். ‘இனி, இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வருவதில்லை’ என்ற முடிவோடு வீடு செல்வார்கள். இது தேவை தானா?
ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுபவர்கள், அந்தத் தலைப்பில் மட்டும் செய்தி களைத் தரவேண்டும். தலைப்பை விடுத்து வேறு விஷயங்களைப் பேசினால், மக்கள் வெறுப் படைவார்கள்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய் பவர்களும் தலைப்புக்கேற்ற சொற்பொழிவாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நகைச் சுவை மன்றத்தில் பேசுமாறு நகைச்சுவை உணர்வு இல்லாத வரை அழைத்தால், அவர் என்ன செய்வார்? பாவம். ஆழ்ந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். நகைச்சுவையை எதிர் பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். அவரை அழைத்தது தவறு என்றால், பேசவந்தது இவர் செய்யும் மிகப்பெருந்தவறு.
கூட்டம் கேட்க வந்த சுவைஞர் களின் உள்ளத்தைப் புண்படுத் தாதவாறு பேச வேண்டும். அது தான் மேடை நாகரிகம்.
ஒருமுறை பெர்னாட்ஷா லண்டனில் பேசும் போது, வந்திருந்தவர்கள் சுவைத்துக் கேட்காததை உணர்ந்து, ‘கேட்க வந்தவர்களில் பாதிப்பேர் முட்டாள் கள்’ என்றார். கூட்டம் ஆவேசத்துடன் அவர் பேச்சை எதிர்த்து மன்னிப்புக் கேட்குமாறு முழக்கமிட்டது.
பெர்னாட்ஷாவோ அமைதி யாக, ‘வந்திருப்போரில் பாதிப் பேர் அறிவாளிகள்’ என்று கூறி னார். கூட்டம் அமைதியடைந்து ‘அப்படிச் சொல்லுங்கள்’ என்றது. முதலில் சொன்ன தற்கும் மறுபடி சொன்னதற்கும் வித்தி யாசமில்லை. எனினும் பேச்சு முறையில் நயம் இருந்ததால் தப்பித்தார்.
மேடையேறிப் பேசுவது தான் பேச்சு என்பதில்லை. மற்றவர் களுடன் உரையாடுவதும் ஒரு கலையே ஆகும்.
உரையாடுவதில்தான் எத்தனை வகைகள்? நம் மன நிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்? இன்று நல்ல ஓய்வு; யாராவது வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து தயாராயிருக்கும் போது ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொண்டு ‘இதோ வருகிறேன்’ என்று போய் விடுவோர் எத்தனை பேர்?
உடல்நிலை சரியில்லாமல் எப்போதோ இருந்ததை விசாரிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, ‘அப்படியே ஒரு 50 ரூபாய் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்’ என்பவர்கள் எத்தனை பேர்? உடல் நலம் கேட்கவா வந்தார்? இல்லை, கடன் வாங்கத்தான் வந்தார். உடல்நலம் விசாரிக்க வந்ததாக பொய் கூறுகிறார். அவரிடமும் பேசிக் கொண்டிருக் கத்தான் வேண்டியிருக்கிறது!
ஏதோ ஒரு விஷயத்தை நம்மிடம் தெரிந்துகொள்ள வந்தது போல் பாவனை! ஆனால் அவருக்குத் தெரிந்த ஒன்றை நம்மிடம் சொல்ல வந்ததே உண்மை!
சிலப்பதிகாரத்திலே பாண்டி யன் “ஏன் சார், கோவலனைக் கொன்றான்?” என்று கேட்டு அவசரமாகப் போகும் நம்மை வழியில் நிறுத்துவார். நாமும் நம் வேலையை விட்டு, அவருக்கு விளக்கம் கூற முற்பட்டு ‘‘கோவலன் மனைவி பேரு கண்ணகிங்க. அவன் அவளை அழைச்சிட்டு மதுரைக்கு வாணி கம் செய்ய வந்தாங்க’’ என்று ஆதியோடு அந்தமாகச் சிலப்பதி காரம் சொல்ல முற்படும் வேளையில்,
‘கொஞ்சம் இருங்க’ என்று நம்மை நிறுத்திவிட்டு, தான் மதுரைக்குப் போனவாரம் சென்றிருந்ததாகவும், அங்கு ஒரு மேடான பகுதியைப் பார்த்த தாகவும், விஷயந்தெரிந்தவர் களை விசாரித்ததாகவும், அங்கு தான் கோவலன் கொலை செய்யப்பட்டதாகவும், மன்னனே நேரில் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், நீதி தவறி மன்னன் வெட்டியதால் கோவ லன் புதைக்கப்பட்ட மேடு கரை யாமல் இன்றுவரை அப்படியே இருப்பதாகவும் எத்தனையோ
முறை எத்தனையோ பேர் கரைத்தும் மேடு கரையவில்லை என்றும், இந்த அதிசயத்தை வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் செல்வதாகவும், தான் அதைப்பார்த்து அதிசயித்து நின்றதாகவும் கூறுவார்.
அதோடு நிறுத்தமாட்டார். ‘நீங்கள் மதுரை போனதே இல்லையா? மேட்டைப் பார்க் கவே இல்லையா? அந்த மேட்டைக் கூடப் பார்க்காமல் மதுரை போய் வந்தால் என்ன பிரயோசனம் என்றும் வேறு கேட்டு நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவார்.
இவர் நம்மிடமிருந்து சிலப்ப திகாரம் தெரிந்து கொள்ள வர வில்லை. தான் அறிந்து வைத்தி ருக்கும் ஒரு கட்டுக் கதையை நம் தலையில் கட்டப் பார்க்கிறார். அவர் நேரமும் பாழ், நம் நேரமும் வீண். வீண் கதை கேட்டதே மிச்சம்.
பொதுவான இடங்களில் நம் நாவுக்கு வேலை தராமல் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு அனுப வக் கொள்முதல் செய்வதுதான் அறிவுடைமை.
பேருந்துப் பயணம், ரயில் பயணம், நடைப்பயணம் ஆகிய பொழுதுகளில் நாவுக்கு வேலை தராமல் இருப்பது சாலச் சிறந்தது. வீண் விவாதங்கள் முட்டாளிடம் பேசி அதிமுட்டாளாதல் போன்ற அசிங்கங்களில் அகப்பட்டுக் கொள்ளும் அபாயம் நேரும்.
காதைத் திறந்துகொண்டு – அதாவது காதில் வாங்காமல் இருந்துவிடாமல் – கேள்வி ஞானம் பெறலாம்.
சங்கீதம் சொல்லித்தரும் சங்கீத வித்வான்களிடம் ஒரு பழக்கம் உண்டு. சிஷ்யனுக்கு அரங்கேற்ற அளவிற்குச் சொல்லிதந்த பிறகு அவனுக்கு விடைதரும் நேரத்தில், “அப்பா, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் குடுத்துவிட்டேன். இனி உன் கேள்வி ஞானத்தால் சங்கீதத்தை விருத்தி செய்துகொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.
“கேள்வி ஞானம்” என்பது அவ்வளவு முக்கியமானது. கேட்டுக்கேட்டே சிறந்த ஞானம் பெற்றவர்கள் உண்டு. உதாரணத் துக்குச் சில சொல்வேன்.
ஒரு இளைஞன் நன்றாகக் குடித்துவிட்டு, பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான். தாறு மாறாகப் பேசுகிறான். பக்கத்தில் அமர்ந்திருப்போரிடமெல்லாம் தகராறு செய்கிறான். மூன்றுபேர் அமரும் இருக்கையில் அவன ருகே அமர்ந்து ஒவ்வொருவராக, அவன் தொல்லை பொறுக்க முடியாது எழுந்து சென்று விடுகின்றனர். மூவர் இருக்கையில் இப்போது அவன் மட்டும்.
பேருந்தில் நிறையப்பேர் அமர இடமின்றி நின்று வருகின்றனர். எனினும் அவன ருகில் அமர எவரும் விரும்ப வில்லை. நின்றாலும் பரவா யில்லை, அவன் அருகில் மட்டும் அமரக்கூடாது என்ற உறுதியில் எல்லோரும் உள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கிழவி (60 வயதுக்குமேல்) “என்னப்பா இப்படி பயப்படுறீங்க? என்னமோ கொஞ்சம் குடிச்சிட்டான் அவ் வளவுதானே! நம்ம புள்ளயா இருந்தா இப்படி ஒதுக்கு வோமா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் சென்று உட்கார்ந்தார்.
சற்று நேரம் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்த குடிகாரன் மெதுவாக அந்த அம்மையாரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “ஏ கிழவி! இப்பவே நீ இவ்வளவு அழகா இருக்கியே? உன் வயசுல நீ என்னமா இருந்திருப்பே? பயலுவ உன்னைச் சுத்தி சுத்தி வந்திருப் பானுங்களே?” என்று பின் னோக்கி பார்வையைச் செலுத்தத் தொடங்கினான்.
“போடா நாயே! பொறுக்கி! நீ நாசமாப் போவே” என்று திட்டிச் சாபம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டார். வெகுதூரம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மலத்தை மிதித்து விட்ட சகியாமை முகத்தில் தோன்ற கூச்சத்தோடு நின்றபடி பயணம் செய்தார்.
இதைக் கண்டும் கேட்டும் நான் உணர்ந்த ஒன்று உண்டு. குடிகாரனிடம் பேச்சுக் கொடுத் தால் மானம் பறிபோகும்.
திருக்குறளில்,
களித்தானைக் காரணங் காட்டல் தூநீர்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
என்று சொல்லப்பட்டிருப் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். குடிகாரனுக்கு அறிவுரை சொல்லித் திருத்த நினைக்காதே. மெழுகுவர்த்தி கொண்டு நீருக்குள் தொலைந்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? என்று வள்ளுவர் சொல் வதற்கு பேருந்தில் ஓர் எடுத்துக் காட்டாக அல்லவா அந்தச் சம்பவம் அமைந்தது!
பேருந்து ஓட்டுநர் ஓர் அம்மையாரிடம் “அந்த ஊரிலே எல்லாம் இந்த பஸ் நிக்காதும்மா” என்றபோது அந்த அம்மையார், “நீ பிரேக்கைப் போடுய்யா, நிக்குதா? இல்லையான்னு பார்ப் போம்,” என்றதும் ஓட்டுநர் முகத்தில் விளக்கெண்ணெய்!
நான் ஏதாவது அந்தப் பெண் மணியிடம் பேசியிருந்தால் எனக்கும் அதே விளக்கெண் ணெய்தானே? இதனால்தான், பொது இடங்களில் வாயைத் திறக்காமல் செவி சாய்க்க வேண்டும் என்பது!