Tuesday, February 9, 2010

பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்

பழைய கணினிகளைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு புதிதாக மாறுபவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கணினியையே இன்னும் பயன்படுத்தும் மக்களும், நண்பர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தப் பதிவு.
இன்றைய நவீனக் கணினி உலகில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை யெல்லாம் அந்தப் பழைய கணினிகளில் பயன்படுத்த இயலாது. வேக ஓட்டம் சீராக இருக்காது. சுத்தமாக அந்தப் பழைய கணினியானது செததுச் செத்து விழும். இருப்பினும் அவர்களுடைய கணினியின் குறைந்தபட்சத் திறனை வைத்துக்கொண்டே அதிகபட்சச் செயல்பாட்டை அனுபவிக்கக் கீழ்க்கண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

1) குறைந்த கணினித்திறனையும், நினைவகத்தையும் உபயோகித்து PDF கோப்புகளைப் படிக்க Sumatra PDF பயன்படுத்தலாம். ( Adobe Reader ஐ பழைய கணினியில் நிறுவிப் பாருங்கள். கண்டிப்பாக நிறுவுவதற்கே நிறைய நேரம் பிடிக்கும். பின்பு PDF கோப்பைத் திறந்து பார்ப்பதற்கு இன்னும் அதிக நேரம் பிடிக்கும். )

2) MS Word க்கு மாற்றாக AbiWord பயன்படுத்தலாம். இலவசமாகக் கிடைக்கும் ஒரு Word prorcessing பயன்பாடு இது. 16 MB நினைவகம் கூட இந்தப் பயன்பாட்டின் செயல்பாட்டிற்கு மிக நல்ல வேகத்தை அளிக்கும்.

3) Photo Editing ன் அடிப்படைத் தேவைகளைச் செய்வதற்கு IrFanView பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் நீள,அகலத்தை மாற்றுவதற்கு இதைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம்.

4) குறைந்த நினைவகம், கணினித் திறனைப் பயன்படுத்தக் கூடிய நிரல் எழுதும் பயன்பாட்டிற்கு NoteTab Light பயன்படுத்தலாம்.

5) நவீன மின்னஞ்சல் யுகத்தில் பயன்படுத்தும் Ajax போன்றவற்றைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் பயன்பாடுகளை Popcorn பயன்படுத்தி ஓரங்கட்டலாம்.

6) 32 MB நினைவகமும், 486 processor, Windows 95ம் கொண்ட பழைய கணினியில் இணைய உலவுதலுக்காக K-Meleon பயன்படுத்தலாம். உலகின் மிக வேகமான browser எனப் பெயரெடுத்தது இது.

7) Pentium முதலாம் தலைமுறைக் கணினிகளில் ஒளிப்படங்களைக் காணொளிகளைக் காண்பதற்கு VLC Media Player பயன்படுத்தலாம். DVDs, MP3 போன்றவற்றை இயக்குவதற்கு இது ஒரு அருமையான மென்பொருள்.

8)கணினியின் தேவையற்ற குப்பைக் கோப்புகளை அழித்து நிறையக் காலியிடங்களை hard disk (வன்வட்டு)ல் உருவாக்க CCleaner பயன்படுத்தலாம்.

9)Google, yahoo, MSN என ஒவ்வொரு அரட்டை அரங்கங்களுக்கும் தனித்தனியாக IM - Instant Messaging பயன்பாடுகளை நிறுவுவதற்குப் பதிலாக Pidgin என்னும் ஒரேயொரு பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.10) பழைய கணினியில் USB - Universal Serial Bus இணைப்பதற்கான வழிவகை இல்லாவிடில் அதற்கான ஒரு Card வாங்கிச் செருகி USB ஐக் கையாளலாம்.2010ல் USB 3.0 வருகிறதாம்.

No comments:

Post a Comment