Saturday, January 30, 2010

உறவுகள்.. உணர்வுகள்…

“ஆசையே அழிவிற்குக் காரணம்” – சரிதான். உறவுகள் சிதைந்து போவதற்கு…?
வேறென்ன? அதீத எதிர்பார்ப்பு தான் காரணம்.
வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு. தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை.
உணர்வுகளையும் மீறி நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் சில முகமூடி களை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் சில உண்மை களை உணரமுடியும்.
“என்னோட அம்மா அப்ப எல்லாம் என்கிட்ட யிருந்து ஒரு துளி பிரதி பலனைக் கூட எதிர்பார்க் கலைப்பா. இதுவரைக்கும் எல்லாமே அவங்கதான் எனக்கு செஞ்சிருக்காங்க….” – இப்படி சொல்லும் போது சம்பந்தப்பட்ட வரின் முகத்தில் பெருமிதம் பொங்கும். உலகில் பலருக் கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம், வரப்பிரசாதம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தின் வெளிப்பாடுதான் இது.
இதற்கு நேர்மாறாக, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, குரலில் விரக்தி தோய்ந்திருக்க, “சே, என்னடா வாழ்க்கை இது. இந்த அன்பு, பாசம், காதல் எல்லாமே பொய். நம்மால ஏதாவது பிரயோஜனம் இருந்தாதான் உறவுகள் தேடிவரும். பணம், காசு, குறைந்தபட்சம் உடலுழைப்பு…. இப்படி ஏதாவது ஒரு பயனை எதிர்பார்த்துதான் எல்லாரும் சுத்தி வர்றாங்க. இது எதுவுமே இல்லாத நிலைமைல நாம இருந்தா தாயாவது, மனைவியாவது… ஒரு நாய்கூட திரும்பி பார்க்காது.”
“மனுஷங்க எல்லாருமே சுயநலத்தின் சிகரங்கள்தான். நமக்கு காரியம் ஆகனும். மத்தவங்க என்ன ஆனாலும் சரி…. இந்த மனோபாவம் தான் எல்லார்கிட்டேயும் இருக்கு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சக்கையா அடுத்த வங்களைப் பிழிஞ்சிட்டு, தன் காரியம் முடிந்ததும் கருவேப்பிலையைத் தூக்கி எறியற மாதிரி ஒரு ஓரமா தூக்கி கடாசிடுவாங்க….”
இந்த புலம்பல்களை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு ஒதுக்கித் தள்ளிவிடாமல், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இதற்கு அடிப்படைக் காரணம் அதீத எதிர்பார்ப்புதான் என்பது புரியும்.
“மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்கள்…. ஒவ்வொரு வார்த்தை யையும் பேசுகிறார்கள்…. “எனப் புலம்புபவரும் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார் அல்லவா? மற்றவர்கள் தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஆசைப்படுவதும் எதிர்பார்ப்புதானே….?
மனிதர்களின் மனநிலையை உளவியல் ரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1). குழந்தைகள் மனநிலை 2). இளையோர் மனநிலை 3) முதியோர் மனநிலை. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
வாழ்வின் பெரும்பாலான சமயங்களில் முதல் இரண்டு மனோநிலைகளில்தான் இருக்கிறோம். அறுபது வயதான பெரியவர்கூட ஏதோ ஒரு சில கணங்களில் மட்டும்தான் முதியோர் மன நிலையிலிருக்கிறார். எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே நாம் விரும்புகிறோம்.
அனைவரது கவனத்தையும் கவரவேண்டும் என்பதற்காகவே சதா அழுது கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். எப்போதும் நம்மை மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே சத்தமாக பேசி சிரிப்பது, தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் டீன் ஏஜினரைப் பார்த்திருப்போம்.
குழந்தை மனநிலையிலிருக்கும் நாம் மற்றவர்கள் எப்போதும் நம்மேல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
காய்ச்சலில் உதடு காய்ந்து, வாய் கசந்து, வாய்க்குப் பிடித்த உணவை சாப்பிடக்கூட முடியாத நிலையில் சுருண்டு கிடந்தாலும், “இன்னொரு முறை காய்ச்சல் வரக்கூடாதா…” என்று மனதிற்குள் ஏங்குவோம். உண்மைதானே?
காரணம், “ஒரு டம்ளர் கஞ்சியாவது குடிப்பா. கொஞ்சம் ஜுஸ் மட்டும் குடிச்சிக்க….” என ஒரு கையில் மாத்திரையும் இன்னொரு கையில் பாலையும் ஏந்திக்கொண்டு வரும் தாயையும், தங்கையையும் பார்க்கையில், நம்மேல் இவ்வளவு கரிசனமா என்ற மகிழ்ச்சியில் உதட்டோரம் ஒரு சிரிப்பு நெளியுமே, அதற்காகத்தான்.
ஆக, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களின் அன்பும் ஆதரவும் நம்மேல் பொழியப்படுவதில் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
இப்படியிருக்க, அடுத்தவர்களின் எதிர் பார்ப்பை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும். காசோ, பணமோ, அன்போ, ஆசையோ, அக்கறையோ, கரிசனமோ…. எதுவாக வேண்டு மானாலும் இருக்கட்டுமே. அவர்கள் எதிர்பார்ப் பதில் என்ன தவறிருக்கிறது?
நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருப்பதைப் போல அவருக்கும் இருக்காதா?
மற்ற உறவுகளைவிட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு இந்த உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும்.
“என் மனைவி என்னை ஒரு வேலை செய்ய விடக்கூடாது. எனக்கு பார்த்து பார்த்து சமைச்சுப் போடனும். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது. என் துணியெல்லாம் துவைச்சு, அயர்ன் பண்ணி முதல் நாளே மடிச்சு வெச்சிருக்கனும். என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கனும். காசு, பணத்தைப் பத்தியெல்லாம் அவ கவலைப்படத்தேவையில்லை. இருந்தாலும், குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க அவளும் கைகொடுக்க தயாராயிருக்கனும்…” இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் சுமந்து கொண்டு திருமணத்திற்கு காத்திருக்கும் இளைஞர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தினால் புண்ணியமாய்ப் போகும். இப்படி கனவுக் கோட்டைகளை சுமந்துகொண்டு இல்லறத்திற்குள் அடியெடுத்து வைக்காதீர்கள். மூன்று அடி உயரத்திலிருந்து விழுந்தால் இலேசாகத்தான் காயம்படும். தப்பித்து விடலாம்.

பல நூறு அடி உயரத்திலிருந்து விழுந்தால் ஒரு எலும்புகூட மிஞ்சாது. சரிதானே?
“பெண் என்பவள் பாசத்தின் ஊற்று, சதா அன்பைப் பொழியும் தாயுள்ளம் படைத்தவள்” என்று உங்களுக்கு வசதியாய் நீங்களே பல கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளாதீர்கள். மனதில், ஆண் மனம் பெண் மனம் என்று பாகுபாடில்லை. சமூக, குடும்ப சூழ்நிலை காரணமாய், பழக்க வழக்கத்தினால் இயல்பாகவே பெரும்பாலான கடமைகளை, பெண் பூர்த்தி செய்து விடுகிறாள்.
ஆணிடமிருந்து அவள் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தையும், கொஞ்சம் கரிசனத்தையும் தான். அந்த கடமையை தட்டிக் கழிக்காமல், உள்ளார்ந்த அன்போடும், அக்கறையோடும் அவளை அரவணைத்துக் கொள்ளுங்கள்.
கணவன்-மனைவி, நண்பர்கள், தாய்-சேய் என உறவு எதுவானாலும் பெறுவதில் மட்டுமல்ல, கொடுப்பதிலும் ஒரு சுகம் உண்டு. அன்பை வாரி வழங்குவபவர்களாக மாறினால், உங்கள் எதிர் பார்ப்பை கொஞ்சம் தள்ளி வைத்து அடுத்தவர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயன்றால் உறவுகளை நீஙகள் தேடிப்போக வேண்டிய தில்லை.
உறவுகள் உங்களை நாடி ஓடி வரும்….!

No comments:

Post a Comment